2025- 26ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி அன்று தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதியில் முடிகின்றன.

Continues below advertisement

இந்தத் தேர்வுகளை 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8,70,000 மாணவர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.

செய்முறைத் தேர்வு தேதிகள்

செய்முறைத் தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை 2026-ன்படி 2025-26-ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டு வரை மேல்நிலை முதலாமாண்டு வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 வரை நடைபெற உள்ளது. செய்முறைத்தேர்வுகள் 16.02.2026 மு தல் 21.02.2026 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் என்னென்ன தேர்வுகள்? பார்க்கலாம்.

வ.எண் தேதி பாடம்
1 மார்ச் 11 தமிழ், இதர மொழிப்பாடங்கள்
2 மார்ச் 16 ஆங்கிலம்
3 மார்ச் 25

கணிதம்

4 மார்ச் 30 அறிவியல்
5 ஏப்ரல் 2

சமூக அறிவியல்

6 ஏப்ரல் 6

விருப்பப் பாடம்