பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், பனிரெண்டாம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்   பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிலவரம் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை , மாணவர்கள- 7873 பெண்கள் 7593 என மொத்தமாக 15466 பேர் தேர்வு எழுதினர் அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 6794 நபர்களும். மாணவிகள் 790 நபர்களும் மொத்தம் 13 ஆயிரத்து 684 நபர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 88. 48 சதவீதம்.

   

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் -83.97.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம்  பள்ளிகள் -187.அரசு மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை -93. 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் -8. 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை -32. மாவட்டத்தின் தரம் -28வது இடம் பிடித்துள்ளது.




 

செங்கல்பட்டு

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 184 இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளின் எண்ணிக்கை 73. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 30 மற்றும் மெட்ரிக்குலேஷன் சுயநிதி பள்ளிகளின் எண்ணிக்கை 171. இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் 36 ஆயிரத்து 521 நபர்கள் தேர்வு எழுதினர் அவற்றில் தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 647 அதன் சதவீதம் என்பது 86.65.  இப்பொழுது பொதுத்தேர்வில் மாணவர்கள் 18 ஆயிரத்து 314,  மாணவிகள் 18507 பேர் தேர்வு எழுதினர் இதில் மாணவர்கள் 16829 பேரும் , மாணவிகள் 16818 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

மாணவர்கள் 80.90 7 சதவீதமும் மாணவிகள் 92.37 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 9. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.14, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.64. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி, அதேபோல மெட்ரிகுலேஷன் மற்றும் சுயநிதி பள்ளியில் 100% என மாவட்டம் முழுவதும் 112 இரண்டு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடைந்து உள்ளது.