கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதற்கடுத்தபடியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது.
10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு படி, ஜூன் 20ஆம் தேதியான இன்று, பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 203 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 7090 மாணவர்களும் , 6943 மாணவிகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியதில் இன்று வெளியான தேர்வு முடிவில் மாவட்டத்தில் 6503 மாணவர்களும், 6743 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 84.07% மாணவர்களும், 94.36% மாணவிகளும் என மொத்தம் தேர்வு முடிவில் 94.39% மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல தேனி மாவட்டத்தில் உள்ள 142 பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 7857 மாணவர்களும், 7246 மாணவிகளும் தேர்வு எழுதியதில் 6605 மாணவர்களும் , 6837 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 91.72% மாணவர்களும் , 97.12 மாணவிகளும் என மொத்தம் 89% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்