10, 12ஆம் வகுப்பை முடித்தவர்கள் இலவசமாக பிஎஸ்சி படிக்கலாம் என்றும் படித்து முடித்ததும் ஆரம்ப ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தமிழ்‌ நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்கள், ஹோட்டல் மேனேஜ்மென்ட்‌ கேட்டரிங்‌ டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் ‌B.Sc (Hospitality & (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப் படிப்பு மற்றும்‌ பட்டயப் படிப்புகள்‌ சேர்ந்து படிக்கலாம்‌. படிப்பு முடித்தவுடன்‌ வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்‌ என சென்னை மாவட்ட ஆட்சியர்‌ அருணா தெரிவித்துள்ளார்‌.


சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது (50 9001 2015 தரச்‌ சான்று பெற்ற நிறுவனமாகும்‌. இந்நிறுவனமானது ஒன்றிய அரசின்‌ சுற்றுலாத் துறையின்‌ கீழ்‌ அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்‌, மேலும்‌ இந்நிறுவனம்‌ சர்வதேச அங்கீகாரம்‌ பெற்றது. அமெரிக்க வணிக கவுன்சில்‌ (Amercian Council of Business) ஆல்‌ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


புகழ்‌ பெற்ற இந்நிறுவனத்தில்‌ 12ஆம்‌ வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நோ பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப்‌ படிப்பு, மேலும்‌ பத்தாம்‌ வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும்‌ பதனிடுதல்‌ கைவினைஞர்‌ படிப்பு(Craftmanship Course in Food Productio Craftmanship Course in Food Production & Patisserie n & Patisserie), உணவு மற்றும்‌ பானசேவையில்‌ கைவினைத்திறன் படிப்பு (Craftmanship Course in Food  Beverage Service , பேக்கரி மற்றும்‌ மிட்டாய்‌ துறையில்‌ பட்டயப்படிப்பு, (Diploma in Bakery Diploma in Bakery & Confectionary), முன்‌ அலுவலக செயல்பாட்டில்‌ பட்டயப்படிப்பு, (Diploma in Housekeeping Operation), ஹவுஸ்‌ கீப்பிங்‌ செயல்பாட்டில்‌ பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும்‌ உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு (Graduate Diploma in Dietetics & Hospital Food Service Post Graduate) , விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு (Post Graduate Diploma in Accommodation Operation & Management) படிப்பில் சேர்ந்து படித்திடவும்‌, படிப்பு முடிந்தவுடன்‌ நட்சத்திர விடுதிகள்‌, விமானம்‌ நிறுவனம்‌, கப்பல்‌ நிறுவனம்‌, சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ உயர்‌ தர உணவகங்கள்‌ போன்ற இடங்களில்‌ வேலை வாய்ப்பும்‌ பெற்று
தரப்படும்‌.


என்ன தகுதி?


இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்தாவராக இருக்க வேண்டும்‌. 
10ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பில்‌ 45 சதவீதம்‌ மதிப்பெண்‌ பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. 
குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.3.00 இலட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌. 
இப்படிப்பிற்கான செலவீனம்‌ தாட்கோவால்‌ ஏற்கப்படும்‌.


ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல்‌ ரூ.35,000/- வரை பெறலாம்‌. இத்திட்டத்தில்‌ பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம்‌ www.tahdco.com என்ற முகவரியில்‌ பதிவு செய்ய வேண்டும்‌.


முழுமையான தகவல்களுக்கு: http://iei.tahdco.com/htmgt_reg.php என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


இதையும் வாசிக்கலாம்: TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி