தமிழ்நாட்டில் இளைஞர்கள், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரைக்கும் கடனுதவி வழங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) சார்பில் இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
தனி நபர் கடன் திட்டம் - ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்ப செலுத்தும் காலம்- 3 முதல் 5 ஆண்டுகள்
ஆண்டு வட்டி விகிதம் 7-8 சதவீதம்
பயனாளியின் பங்கு 5 சதவீதம்
அதேபோல விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் பார்க்கலாம்.
தகுதிகள்
பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வயது: 18-60 வரை.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
திட்ட அறிக்கை,
முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து விலைப்புள்ளி (ரூ. 5 இலட்சத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டும்),
குடும்ப அட்டை ஓட்டுநர் உரிமம்,
ஆதார் அட்டை,
வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.
விண்ணப்பிக்கும் முறை
* அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.
* டாப்செட்கோவின் இணையதளம் www.tabcedco.tn.gov.in
* கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்
* மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள்/கட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. டாப்செட்கோ (TABCEDCO), பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.tabcedco.tn.gov.in/