2023ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, சிஜிஎல் எனப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, சிஎச்எஸ்எல் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளி அளவிலான தேர்வு, இளநிலை பொறியாளர் தேர்வு, மத்திய ஆயுதப்படை தேர்வு ஆகியவற்றுக்கான தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அட்டவணை வெளியாகி உள்ளது.
தேர்வு அட்டவணை
ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான அளவிலான தேர்வு (சிஜிஎல்- CGL Combined Graduate Level - இரண்டாம் நிலைத் தேர்வு)- அக்டோபர் 25, 26 மற்றும் 27, 2023.
ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு (சிஎச்எஸ்எல்- CHSL Combined Higher Secondary (10+2) Level
Examination, இரண்டாம் நிலைத் தேர்வு)- நவம்பர் 2 2023.
இளநிலை பொறியாளர் தேர்வு ( சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் JE தேர்வு, Junior Engineer (Civil, Mechanical,
Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2023 இரண்டாம் தாள்)- டிசம்பர் 4 2023.
டெல்லி காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய ஆயுதப்படை தேர்வு ( CPO Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination,இரண்டாம் நிலைத் தேர்வு)- டிசம்பர் 22 2023.
கடந்த ஆண்டு தேர்வு எப்படி?
இரண்டாம் நிலைத் தேர்வு பொதுவாக மூன்று தாள்களை கொண்டிருக்கிறது. முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடக்க உள்ளது.
செஷன் 1 மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலை ஒரு மணி நேர தேர்வு- கணிதம், பொது அறிவி திறனறிதல் உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகளை கொண்டிருக்கும்.
செஷன் 2 - ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதில் ஆங்கிலம், மொழி, பொது அறிவு உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். செஷன் 3- இது 15 நிமிடங்கள். கம்யூட்டர் அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.
இதை தொடர்ந்து இரண்டாம் நிலைத் தேர்விற்கான செஷன் -2 தேர்வு நடைபெறும். ஆன்லைன் தேர்வு என்பதால் நேர மேலாண்மை முக்கியம். குறிப்பிட்ட கால அளவு முடிந்த பிறகு போர்ட்டல் செயல்படாது.
கூடுதல் விவரங்களை அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Schedule%20of%20Examination_19082023.pdf என்ற முகவரியை அணுகலாம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய இணையதளம்: https://ssc.nic.in/