பணியாளர் தேர்வு ஆணையத்தின் (எஸ்எஸ்சி), 2021 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான பணி சேர்க்கைக்காண  ( நிலை - I) அறிவிப்பு வரும் 23ம் தேதி வெளியிடப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு 2022, ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்றும் அறியப்படுகிறது.   


மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான, எஸ்எஸ்சி தேர்வு  இந்தியாவின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 


தேர்வு முறை: 


3 (அ) 4 கட்டங்களைக் கொண்டது. முதல் இரண்டு நிலை தேர்வுகள் கணிணி அடிப்படையில் நடைபெறும்.  இவை மெட்ரிகுலேஷன், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு, மேற்படிப்புகள் முதலானவற்றின் குறைந்தபட்ச அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டு Objective Type Multiple Choice questions வடிவத்தில் நடத்தப்படும். மூன்றாம் கட்டத் தேர்வு காகித  முறையில் விரிவான தேர்வாக  நடைபெறும். தேவைக்கேற்ப 4-வது நிலைத் தேர்வு நடைபெறும். பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவனங்களை (அசல் கல்வி சான்றிதழ்) உரிய வகையில் நேரடியாக சமர்பித்தால் மட்டுமே இறுதியாக தேர்ச்சி பெற முடியும். 


கல்வித் தகுதி: பட்டதாரி 


வயது தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 32 வயது பூர்த்தி ஆனவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், இடஒதுக்கீடு வழிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வுகள் கடைபிடிக்கப்படும். 


இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்படும்.   


Karnataka’s forced conversion : 10 வருஷம் ஜெயில்! திருமண மதமாற்றத்துக்கு சட்டம் கொண்டுவரும் கர்நாடகா! 


விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவுறுத்தல்கள் அதனை சமர்பிப்பதற்கான விவரங்கள் இணையதளத்தின் (ssc.nic.in) வாயிலாக காணலாம்.  இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை, தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து, தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னணு அனுமதிச் சீட்டு மற்றும் செல்லத்தக்க அசல் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 


இது பற்றிய தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும்.  


கட்டாயம் வாசிக்க: 


IIT Madras | உதவித்தொகையுடன் ஐஐடி சென்னையில் ஆன்லைன் படிப்பைப் படிக்கலாமா?