3, 5, 8ம்‌ வகுப்பு தமிழக மாணவர்களுக்கு பிப்.4 முதல் கற்றல் அடைவுத் தேர்வு; வழிமுறைகள் வெளியீடு!

மாநில கற்றல்‌ அடைவு ஆய்வு (SLAS) 3, 5 மற்றும்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு 04.02.2025 முதல்‌ 06.02.2025 வரை நடத்தப்பட உள்ளது.

Continues below advertisement

SLAS எனப்படும் தொடக்கக் கல்வி மாநில கற்றல்‌ அடைவு ஆய்வு மாதிரித் தேர்வு (State Level Achievement Survey) பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து அவர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:


மாநில கற்றல்‌ அடைவு ஆய்வு (SLAS) 3, 5 மற்றும்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு 04.02.2025 முதல்‌ 06.02.2025 வரை நடத்தப்பட உள்ளது. அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும்‌ மேனிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

எந்தெந்தப் பள்ளிகளுக்கு...?


நடைபெற உள்ள SLAS மதிப்பீட்டுடன்‌ தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும்‌ மேனிலைப் பள்ளிகளில் உள்ள 3, 5 மற்றும்‌ 8 ஆம்‌ வகுப்புகளுக்கு வழங்கப்பட உள்ளன. 


இம்மாதிரி வினாத்தாள்கள்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப் பள்ளிகளில்‌ பதிவிறக்கம்‌ செய்து 3, 5 மற்றும்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்களும்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மாதிரி வினாத்தாள்கள்‌ எப்போது?


மாதிரி வினாத்தாள்கள்‌ மற்றும்‌ விடைக் குறிப்புகள்‌ கீழ்க்கண்ட தேதிகளில்‌ வழங்கப்படும்‌.
 மாதிரி வினாத்தாள்‌ 1 - 13.01.2025
 மாதிரி வினாத்தாள்‌ 2 -  20.01.2025
 மாதிரி வினாத்தாள்‌ 3 - 27.01.2025
 விடைக் குறிப்புகள்‌ 1,2,3 - 30.01.2025

தொடக்கக் கல்வி மாநில கற்றல்‌ அடைவு ஆய்வு மாதிரித் தேர்வு  மதிப்பீட்டுடன்‌ தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம்‌ செய்வது தொடர்பாக கீழ்க்காணும்‌ அறிவுரைகள்‌ வழங்கப்படுகிறது.


1. வினாத்தாள்கள்‌ அனைனத்தும்‌ மாநில மதிப்பீட்டுப்‌ புலம்‌ வழியாக https:exam.tnschoolsgov.in என்னும்‌ இணையதளத்தில்‌ முன்கூட்‌.டியே பதிவேற்றம்‌ செய்யப்படும்‌.

2. வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கம்‌ செய்யும்‌ போது ஏற்படும்‌ சிக்கல்களுக்குத்‌ தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத்‌ தொலைபேசிச்‌ சேவையைப்‌ பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்‌.


3. அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும்‌ மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும்‌ வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌ என்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://exam.tnschools.gov.in/

Continues below advertisement