அஜித்

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புக்கு நடுவில் நடிகர் அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடைபெற்று வரும் 24H மிச்லின் கார் பந்தையத்தில் அஜித்தின் அஜித் குமார் ரேஸிங்' அணி கலந்துகொண்டனர். அஜித் குமார் கார் பயிற்சி மேற்கொண்டபோது விபத்து ஏற்பட்டது. அதனால், அவர் சமீபத்தில் நடக்கும் போட்டிகள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். 

போர்ஷே 992 கார் பிரிவில் அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 3வது இடம்பிடித்த மகிழ்ச்சியில் அஜித்குமார் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அணியினருடன் கொண்டாடினார்.  இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்தி கார் பந்தய மைதானத்தில் உலா வந்தார். அஜித் குமாரின் வெற்றிக்கு தமிழ் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் , லோகேஷ் கனகராஜ் , கமல்ஹாசன், ஆதிக் ரவிச்சந்திரன் மேலும் பலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.