சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு விவசாய வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் காலியாகவுள்ள டிப்ளமோ படிப்புகளுக்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் வருகின்ற 29.8.2025 ஆம் தேதிக்குள் https://tnau.ucanapply.com என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
அரசுக் கல்லூரிகளில் 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் முயற்சி
சிவகங்கை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்ந்திடும் பொருட்டும், அரசுக் கல்லூரிகளில் 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திடும் பொருட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிடும் பொருட்டும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற காலியாகவுள்ள 497 (129-அரசு கல்லூரிகள், 26-அரசு உதவிபெறும் கல்லூரிகள், 342-தனியார் கல்லூரிகள்) டிப்ளமோ படிப்புகளுக்கு வருகின்ற 29.8.2025 ஆம் தேதிக்குள் https://tnau.ucanapply.com என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு https://tnau.ac.in/ என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ 0422 6611200 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 09488635077, 09486425076 என்ற அலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாவட்ட உயர்கல்வி வழிகாட்டு மையத்தினை நேரிலோ அல்லது 04575-246225 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.