75% கட்டண சலுகையில் தாங்கள் நீட் பயற்சி(NEET Coaching) வழங்குவதாகவும், இதற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் பிரபல போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமான சங்கர் ஐஏஎஸ் ஆகாடமியின் கிளை நிறுவனமான சங்கர் மெடிகோ அகாடமி தெரிவித்துள்ளது.


முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனம்


இது குறித்து சங்கர் ஐஏஅஸ் அகாடமி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: ”போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை முன்னெடுப்பதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி. எங்களது சீரிய பயிற்சி மூலம்  இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மத்திய அரசின் பல்வேறு  துறைகளில் சேவையாற்றக் கூடிய வாய்ப்பை பலருக்கும் வழங்கி சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இந்த அளப்பரிய சேவையின் இன்னொரு அங்கமாக,  மருத்துவத் துறையிலும் மாணவர்கள் சாதிக்கத் தூண்டும் வகையில், சிறந்த பயிற்சிகளை முன்னெடுக்க ஆயத்தமாகி இருக்கிறது.


சங்கர் மெடிகோ அகாடமி


அதன் வடிவாகவே சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இன்னொரு  புதிய பிரிவாக சங்கர் மெடிகோ அகாடமி உருவாகி இருக்கிறது.


வாராந்திர மாதாந்திரத் தேர்வுகள் சங்கர் மெடிகோ அகாடமியில் உள்ள பயிற்றுனர் குழுவில், சென்னை ஐ.ஐ.டி.யின்  முன்னாள் மாணவர்கள்,  மருத்துவ பயிற்சித்துறையில்  15 முதல் 20 ஆண்டு அனுபவம்  கொண்டவர்கள், மருத்துவக்  கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரிடம் பெற்றுள்ளனர். 


மாணவர்களுக்கு ஒரு  சிறப்பான அணுகுமுறையின் மூலம் தரமான பயிற்சியை முன்னெடுக்கிறோம். பயிற்சி நிலை சார்ந்த தகவல் குறித்து மாணவர்களின் பெற்றோர் உடன் சந்திப்பு கூட்டங்களை நடத்தி புதிய வழி முறை களை கையாள்கிறோம்.


தினசரி பகுப்பாய்வு சோதனைகளை மேற்கொள்கிறோம். வழக்கமான பயிற்சியுடன் வாராந்திர, மாதாந்திர தேர்வுகளையும் நடத்துகிறோம்.


75% ஸ்காலர்ஷிப் சலுகை


சங்கர் மெடிகோ அகாடமியில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் 75% கட்டணச் சலுகையில் படிக்கலாம். இதற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வருகிற 30ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்தத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு 75% ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். ஜூன் 1ஆம் தேதி முதல் ‘நீட்’தேர்வு பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது”. எனத் தெரிவித்துள்ளனர்.  


மாணவர்கள் சங்கர் மெடிகோ அகாடமியை 90030 90033 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண