Rural Innovator Award: ரூ. 1 லட்சம் பரிசுடன் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது; அரசு விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ரூ. 1 லட்சம் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கும் தமிழக அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

Continues below advertisement

ரூ. 1 லட்சம் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கும் தமிழக அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

Continues below advertisement

இதுகுறித்து அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தெரிவித்து உள்ளதாவது: 

’’அறிவியல் நகரம் 2018-2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது ஊரகப் புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு
தலா ரூ. 1,00,000/-(ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)- க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவியல் நகரத்திற்கு 30/08/2023 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

*

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுடன், அறிவியல் நகரத்தின் 2022- 2023ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருதுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கணக்கு, புவியியல், வேளாண் அறிவியல் ஆசிரியர்களும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இதில் ஐந்து ஆசிரியர்கள் தமிழ்வழிப் பள்ளிகளில் இருந்தும் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் திறந்த நிலைப் பிரிவிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்படுவர்.

1. கணிதம்
2. இயற்பியல்
3. வேதியியல்
4. உயிரியல் மற்றும் 
5. புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள்
 
விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் முறையான வழியாக அனுப்பப்பட வேண்டும், அதாவது சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டு அறிவியல் நகர அலுவலகத்திற்கு 14.09.2023 அல்லது அதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: www.sciencecitychennai.in

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola