School Reopening: ஜூன் இறுதியில் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை திட்டம்.. முழு விவரம் இதோ..

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளைச் சீரமைக்கும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 

இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது.

இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 2ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இவை தவிர்த்து, அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

தொடரும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்

பள்ளிகள் திறப்பு தாமதமாவதன் காரணமாக, மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்பைச் சரிசெய்யும் வகையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்பட உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola