தமிழ்நாட்டில் நவம்பர் 1-ந் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது.
நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். சுமார் 600 நாட்களுக்கு பிறகு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வந்ததால் அவர்களை சிறப்பாக வரவேற்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மேல தாளங்களுடன், சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாக்லேட்கள், பூங்கொத்து, பரிசுகள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களை கண்டு சிறு பிள்ளைகள் உற்சாகமடைந்தனர்.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவர்களை வரவேற்றார்.
திருப்பூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
பொள்ளாச்சி மாவட்டம் பெத்தநாயக்கனூரில் குழந்தைகளை பள்ளிக்கு வரவேற்ற உதயநிதி, அன்பில் மகேஷ்