2022-23ஆம் கல்வி ஆண்டில், STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை - திரும்பப் பெறுவதாக, புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


STEM வகுப்புகள்:


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள்,உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


அமைச்சர் தொடக்கம்:


STEM திட்டத்தை ,IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். STEM - Science, technology, engineering,maths ஆகிய பாடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதாகும்.


வாபஸ்


இந்நிலையில் 2022-23ஆம் ஆண்டுகளில்  STEM வகுப்புகள் நடத்த வழங்கப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க IIT திட்டமிட்டுள்ளதாக  கூறப்படுகிறது.










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண