பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர்  கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும்  சமூகச் சிந்தனைகளையும்  இளைய தலைமுறையினரிடம்  கொண்டு  சேர்க்கும்  வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அதற்கிணங்க பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 15.09.2022, 17.09.2022 ஆகிய நாள்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.    பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்1. முதல் பரிசு-  ரூ.50002. இரண்டாம் பரிசு- ரூ.30003. மூன்றாம் பரிசு- ரூ. 2000 என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருந்து இருவர் மட்டும் தேர்வு  செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் தனியே வழங்கப்பெறும்.

பள்ளி மாணவர்களுக்கு- பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பேச்சுப் போட்டி நாள்: 15.09.2022, 17.09.2022

பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டி தலைப்புகள்    1. தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன்2. மாணவர்களுக்கு அண்ணா3. அண்ணாவின் மேடைத்தமிழ்4. அண்ணா வழியில் அயராது உழைப்போம்!5. அண்ணாவின் வாழ்விலே!    

தந்தை பெரியார் பேச்சுப் போட்டி தலைப்புகள்

1. பெண்ணடிமை  தீருமட்டும்2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்4. பெரியாரின் உலக நோக்கு.    

பள்ளிகளுக்கான போட்டிகள் வட சென்னையில் அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கத்திலும் தென் சென்னையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அசோக்நகர், சென்னை-5லும், மத்திய சென்னையில் செயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னையிலும் நடைபெறுகின்றன.  

நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி கல்லூரி  மாணவர்களுக்கு

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பேச்சுப் போட்டி நாள் : 15.09.2022, 17.09.2022

தலைப்புகள்: பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டி   

1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்2. அண்ணாவின் மனிதநேயம்3. அண்ணாவின் தமிழ் வளம்4. அண்ணாவும் தமிழ்ச் சமுதாயமும்5. அண்ணாவின் அடிச்சுவட்டில்    

தந்தை பெரியார் பேச்சுப்போட்டி    

1. பெண் ஏன் அடிமையானாள் ?2. இனிவரும் உலகம்3. சமுதாய விஞ்ஞானி பெரியார் 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார்.    

கல்லூரிப்போட்டிகள் வட சென்னையில் அம்பேத்கர் கலைக் கல்லூரி வியாசர்பாடியிலும்  தென் சென்னையில் ராணிமேரி கல்லூரி, சென்னையிலும்   மத்திய சென்னையில் பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே, சென்னையிலும் நடைபெறுகின்றன.  

நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி.