இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 250 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


விண்ணப்பிப்பது எப்படி?


https://scholarships.gov.in/ என்கிற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் தங்களுடைய சேமிப்புக் கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.


கல்வி நிறுவனங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல் அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கென கருத்தில் கொள்ள இயலாது.


இது தொடர்பாக மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு *மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600 032, மின்னஞ்சல் – scholarship201718tvl@gmail.com தொலைபேசி எண்: 044-29530169*
என்ற முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.