தேவையும் தகுதியும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதி ஆகும்.

இதுகுறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் சந்திர மவுலி தெரிவித்து உள்ளதாவது:

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கும் உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, மொத்தத்தில் ரூ.15 லட்சம் பெறுமானம் உள்ள உதவித் தொகைகள், அவரவர் தகுதிக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும். 

முக்கிய நிபந்தனைகள்‌:

* 2023 - 2024 தல்வி ஆண்டில்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்றுள்ள கல்வி நிலையத்தில்‌ சேர்ந்து படித்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அதற்குரிய சான்றிதழ்‌  (Bonafide Certificate) பெற்றிருக்க வேண்டும்‌.

* பிளஸ்‌ ஒன்‌, பிளஸ்‌ 2, பாலிடெக்னிக்‌, பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு ஆகிய வகுப்புகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பயில்பவராய்‌ இருக்க வேண்டும்‌.* கடைசியாக எழுதிய தேர்வில்‌ குறைந்த பட்சம்‌ 80 சதவீதம்‌ (சராசரி) மதிப்பெண்‌ பெற்றிருக்க வேண்டும்‌.* ஒரு லட்சத்துக்கும்‌ குறைவான வருட வருமானம்‌ உடைய குடும்பத்தைச்‌ சேர்ந்த மாணவர்கள்‌ மட்டுமே விண்ணப்பிக்கலாம்‌.* விண்ணப்பப்‌ படிவத்தை பதிவிறக்கி, ப்ரிண்ட்‌ செய்யவம்‌.* விண்ணப்பப்‌ படிவத்தை மாணவர்‌ தமது கைப்பட எழுதி முழுமையாகப்‌ பூர்த்தி செய்யவும்‌.* விண்ணப்பத்தில்‌ கோரப்படாத சன்றிதழ்களை அனுப்புதல்‌ கூடாது.* சான்றிதழ்களின்‌ ஜெராக்ஸ்‌ நகல்கள்‌ மட்டுமே அனுப்பவும்‌. “உண்மை நகல்‌” என்று எழுதி கையெழுத்திடவும்‌.* தபால்‌ மூலமே விண்ணப்பத்தை அனுப்பவும்‌. கூரியர்‌ அனுப்புவதைத் தவிர்க்கவும்‌.* தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே தகவல்‌ தெரிவிக்கப்படும்‌. மற்றபடி கடிதப்‌ போக்குவரத்து கிடையாது.* சான்றிதழ்‌ நகல்களைத்‌ திருப்பி அனுப்ப இயலாது.* உதவித்‌ தொகைகள்‌ பெற மாணவர்களைத்‌ தேர்ந்தெடுப்பதில்‌ அறங்காவலர்கள்‌ முடிவே இறுதியானது.* ஸ்பாஸ்டிக்‌; ஆட்டிஸ்டிக்‌ போன்று சிறப்புக்‌ தல்வி தேவைப்படும்‌ மாணவர்களுக்கு ஒரு பகுதி உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்படும்‌. இவர்கள்‌ சார்பில்‌ பெற்றோர்‌ / பாதுகாவலர்‌ விண்ணப்பிக்கலாம்‌. 

மாணவர்கள் https://images.assettype.com/kalkionline/2023-06/0a7f2ec6-aa82-481b-baae-9cfd3118853c/Kalki_Trust_Form.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பார்த்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தைப் பார்த்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை,“கீதம்‌” முதல்‌ மாடி, நெ.14, நாலாவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர்‌, அடையாறு, சென்னை - 600 020.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.