Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?

பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை (திங்கள்‌ கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Continues below advertisement

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்த நிலையில், நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ தனியார்‌ தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்‌ பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற்றது.

தொடர்ந்து செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறும் 7ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை (திங்கள்‌ கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

சிறப்பு வகுப்புகளை நடத்திய தனியார் பள்ளிகள்

இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. எனினும் இதை மீறி சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பள்ளிகளைத் திறக்கும் முன்பாக, வளாகங்களைத் தூய்மைப்படுத்தி வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்த நிலையில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்தன.

பள்ளிகள் திறப்பன்றே விடைத்தாள்

அதேபோல பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே, மாணவர்களிடம் திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement