புதுச்சேரியில் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி முடிந்த நிலையில், மே மாதம் முழுவதும் கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன்1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்த நிலையில், கடும் வெயில் காரணமாக ஜூன் 1ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7 ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்திலும் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதில், ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளான 127 பள்ளிகளில் CBSE அமலுக்கு வரும் எனவும் இங்கு தமிழ் விருப்ப பாடம் தான். தனியார் பள்ளிகளுக்கு எந்த கட்டாயமுமில்லை பெற்றோர்,மாணவர் முடிவு. CBSEயால் இந்தி திணிப்பு என்பது கிடையாது. CBSE பள்ளிகளை நோக்கி பெற்றோர் செல்வதாலும் NEET போன்ற போட்டி தேர்வுகளில் நமது பிள்ளைகள் பங்கேற்க வேண்டும் என்பதாலும் CBSE க்கு மாற்றியுள்ளோம். 146  தொடக்க கல்வி ஆசிரியர்களை நியமிக்க நேரடி தேர்வா..? மதிப்பெண் தகுதியா..? என  கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் 146 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு மாலையில்  சிறுதானிய சிற்றுண்டி இந்த கல்வி ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என அமைச்சர் நமசிவாயம் கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண