புதுச்சேரி: கோடை விடுமுறைக்கு பின்பு இன்று புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு.


புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கோடை வெப்பம் காரணமாக ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது.


பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணி பாட புத்தகங்கள் பள்ளி கொண்டு வரும் பணி உள்ளிட்ட பணிகளை கல்வித்துறை செய்து வந்தது. இன்று காலை எட்டு முப்பது மணி முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் 9 மணி முதல் அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.


வாட்டர் பெல் அடிக்க வேண்டும் புதுச்சேரி அரசு உத்தரவு


பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் நேற்றயதினம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது புதுச்சேரி அரசு .அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் குடி தண்ணீர், அடிக்கடி குடிக்க வேண்டிம் என அதன் அவசியம் குறித்து ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். காலை 10.30 மற்றும் 11.45 க்கும் மாலையில் 2.30 க்கும் வாட்டர் பெல் அடிக்க வேண்டும் அப்போது மாணவர்கள் குடிநீர் அருந்துவதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பான சுத்தகரிக்கப்பட்ட  குடிநீர் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க புதுச்சேரி அரசு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.