புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.13 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறையை விட 4.81 சதவீதம் கூடுதல் தேர்ச்சி என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல்வர் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர்.


அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளிலும் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், கடந்த முறையை விட இது தேர்ச்சி விகிதம் 4.81 சதவீதம் கூடுதலாகும் என்றார். மொத்தம் 14 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறிய அவர், 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் இரண்டு அரசு பள்ளிகள் அடங்கும் என்றார்.


TN 10th 12th Result 2022 LIVE: பிளஸ் 2 தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி..!


கடந்த ஆண்டை விட அரசு பள்ளிகள் 10 சதவிதம் கூடுதல் தேர்ச்சியை பெற்றுள்ளன என்றும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வி படிக்கும் அளவிற்கு அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி கொடுக்கப்படும் என்றார். பள்ளி கல்வி கட்டணங்கள் குறித்து, அரசு விரைவில் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


TN 10th Result 2022: விழுப்புரம் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விவரம்


சென்டாக் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார். பேட்டியின் போது உடனிருந்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலர் ஜவகர், மற்றும் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோரை முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து பாராட்டினார்.


TN 10th 12th Result 2022: 10, 12-ஆம் வகுப்பில் அதிக தேர்ச்சி பெற்றது அரசுப்பள்ளிகளா..? தனியார் பள்ளிகளா..? முழு விவரம் உள்ளே..!


10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கோவையின் நிலை என்ன? முழு விவரம் இதோ...


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண