TN 10th 12th Result 2022 LIVE: பிளஸ் 2 தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி..!
Tamil Nadu 10th 12th Result 2022 LIVE Updates: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு விவரங்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
10 மற்றும் 12ம் வகுப்பில் அரசுப்பள்ளி மாணவர்களை காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 3,500-க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கு நூறு.. அசத்தல் சாதனை..
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு
* 12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும்
* 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்
10-ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்
74 பேர் தேர்வு எழுதியதில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சதவீதம் 95.94 %
+2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம்..
3095 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2824 பேர் தேர்ச்சி... சதவீதம் 91.24 %
ஜூன் 24-ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் தகவலை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் : மாணவிகள் 94.38% தேர்ச்சி, மாணவர்கள் 85.83% தேர்ச்சி..
பிளஸ் 2 தேர்வில், மாணவிகள் 96.32%, மாணவர்கள் 90.96% தேர்ச்சி..
12-ஆம் வகுப்பில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி.. வெளியானது தேர்வு முடிவுகள்..
ஜூலை மாதம் 25-ஆம் தேதி, முதல் +2 மாணவ மாணவியர்களுக்கான துணைத்தேர்வு தொடங்கும்
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அரசின் சார்பில் கால் செண்டர்கள் மூலம் கால் செய்து கவுன்சிலிங் செய்யப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
மாணவர்களை விட மாணவியர் 8.55% தேர்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்
6 - 12 வகுப்பு முதல் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் ஓரிருநாளில் வெளியாகும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கொரோனாவால் கடைசி ஓராண்டாக வகுப்பகள் எப்படி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஊரடங்கு, பள்ளிவிடுமுறை, தேர்வு தாமதம் ஆகிய காலகட்டத்தில் தேர்வு எழுத வந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றி - அமைச்சர் அன்பில் மகேஷ்
செய்தியாளர் சந்திப்புக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வருகை..
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், ஆன்லைனில் வழங்கிய விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பதிவு எண், பிறந்த தேதியை சரியான தளங்களில் வெளியிட்டால், முடிவுகளைப் பெறலாம்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்னும் சற்று நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.
இதுவரை இல்லாத விதமாக, 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதன்முறையாக ஒரேநாளில் வெளியிடப்படுகிறது
பொதுத்தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு இணையதளங்களையும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு இணையதளங்களையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 22 முதல் ரேண்டம் எண் வழங்கப்படும்
ஜூலை 20 முதல் 31-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்வு என்பதால் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
12-ஆம் வகுப்பு முடிவுகள் தொடங்கும் இன்றே, பொறியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்களும் கிடைக்கின்றன
காலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும், நண்பகல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.
Background
10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண்களாக தலா 35 மதிப்பெண்கள் உள்ளன.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. தனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது.
மாறிய தேதிகள்
இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாளை (ஜூன் 20ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் உள்ள 5 பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம். அதாவது 100க்குத் தலா 35 மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம். அதேபோல, 12ஆம் வகுப்பில் உள்ள 6 பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு கொரோனா காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக 10ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண்களும், 11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 20 சதவீத மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: TN 10th Result 2022: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்படி?- முழு விவரம்
TN 12th Result 2022: புதிய தேதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தெரிந்துகொள்வது எப்படி?- முழு விவரம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -