Moral Education: தவறான பாதையில் மாணவர்கள்...நீதிபோதனை பாடம் கட்டாயம் தேவை - தமிழக அரசுக்கு ஜி.கே மணி தொடர்ந்து வலியுறுத்தல்

தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய நிலையில் நீதிபோதனை பாடம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே. மணி வலியுறுத்தல்

Continues below advertisement

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு இன்று முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கட்சி நிர்வாகி புதுமனை புகுவிழாவிற்கு ஜி.கே. மணி வருகைப் புரிந்தார். 

Continues below advertisement

 அதனைத்தொடர்ந்து பத்திரிகையார்களை சந்தித்து பேசிய ஜிகேமணி, ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்கு, ஒரு குடும்பத்தின் உயர்வுக்கும், நாட்டின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக இருப்பது கல்வி தான். நாட்டின் வளர்ச்சி வகுப்பறையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோன்று வகுப்பறையில்தான் நாடும் உருவாக்கப்படுகிறது. அப்படி வகுப்பறையில் உருவாக்கப்படுகின்ற மாணவர்கள் இன்று ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவது , அடிப்பது திட்டுவது ஆசிரியர்களை தாக்குவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

 


 

 

அதுமட்டுமின்றி பள்ளியின் வகுப்பறைகளிலேயே மது அருந்திக் கொண்டும், போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் சீரழிவது மிக மிக வேதனை அளிக்கிறது. மிகவும் கொடுமையாக உள்ளது.  ஒரு பள்ளி மாணவப் பருவம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பருவமாகும், இந்தப் பருவத்தில் பள்ளி மாணவர்களின் மனதில் என்ன ஆழமாக விதைக்கப்படுகிறதோ அதுதான் மாணவர்களின் மனதில் ஆழமாக பதியும். எனவே மாணவர்களின் நலன் நாட்டின் நலன் ஆகும்.

மேலும் படிக்க: தேர்தலுக்காக பாஜகவும், காங்கிரசும் மேகதாது பிரச்னையை தூண்டிவிடுகின்றன - அன்புமணி குற்றச்சாட்டு

 


நம் நாட்டின் வளர்ச்சி மாணவர்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது. இன்றைய காலகட்டங்களில் மாணவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது‌. எனவே மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டுமானால், ஒன்றாம் வகுப்பிலிருந்து , பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயம் நீதிபோதனை பாடத்தை ஏற்படுத்திட வேண்டும். அந்த நீதிபோதனையின் பாடத்திற்கு அதற்கென ஆசிரியர் நியமித்து தேர்வில் தேர்ச்சி பெற கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏற்கனவே, இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் நான் பேசி இருந்தபோதிலும் பள்ளிகள் தொடங்கிய நாளான இன்று, மீண்டும் மீண்டும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்றார்.

மேலும் படிக்க: Senthil kumar IAS: ராதாகிருஷ்ணனுக்கு மாற்று! ஈபிஎஸ் செயலாளர் டூ சுகாதாரத்துறை செயலர்! யார் இந்த செந்தில்குமார்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola