தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் அரசினர் பொறியியற் கல்லூரி,  சேலம் அரசினர் பொறியியற் கல்லூரி,திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி,வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி,  பர்கூர் அரசினர் பொறியியற் கல்லூரி, பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரி உள்ளிட்ட 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்த, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர B.E., B.Tech  பட்டப்படிப்புகளுக்கு நாளை (04/07/2022) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 


விண்ணப்பதாரர்கள் பட்டயப்படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களாகவோ இரண்டு ஆண்டுக்கு மேல் பணியாற்றி வருபவர்களாகவோ இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




விண்ணப்பிக்கும் முறை:


 www.ptbe-tnea.com   என்ற வலைதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.



விண்ணபிக்க கடைசித் தேதி: 03.08.2022


இந்தப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்கலாம்.


விண்ணப்ப கட்டணம்: 


 பொதுப்பிரிவினருக்கு ரூ.600, பழங்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு ரூ.300 தொகை செலுத்த வேண்டும்.


பதிவுக்கட்டணம் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking மூலம் செலுத்தலாம்.


இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) (TNEA Facilitation Center)மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்த கல்வியாண்டில் பகுதிநோ பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com  என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


தொடர்பு எண் : 0422-2590080,


செல்ஃபோன் எண். 9486977757




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண