School Age : 3 வயதுக்கு முன்னால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதம்: நீதிமன்றம் அதிரடி

3 வயதுக்கு முன்னால் குழந்தைகளை, பெற்றோரே பாலர் பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோத செயல் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளது.

Continues below advertisement

3 வயதுக்கு முன்னால் குழந்தைகளை, பெற்றோரே பாலர் பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோத செயல் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளது. 2023- 24ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குக் குறைந்தபட்ச வயது 6 ஆக இருக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை எதிர்த்துப் பெற்றோர்கள் சிலர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தேசிய கல்விக் கொள்கை அம்சங்களின்படி 6 வயது நிறைவடைந்தால் மட்டுமே ஒரு குழந்தை 1ஆம் வகுப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்தியக் கல்வி வாரியங்களில் சேர 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இந்த முறை படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குறைந்தபட்ச வயது 6

குறிப்பாக இந்த அம்சத்தைப் பாஜக ஆளும் மாநிலங்கள் படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குக் குறைந்தபட்ச வயது 6 ஆக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இதை எதிர்த்து 6 வயது நிறைவடையாத குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பெற்றோர்கள் தரப்பில் புதிய விதிகளின்படி நடப்புக் கல்வியாண்டில், குஜராத் மாநிலத்தில் சுமார் 9 லட்சம் குழந்தைகளின் கல்வி உரிமை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அந்த மனுவை தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி என்வி அஞ்சாரியா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் கூறும்போது, ’’3  வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை பாலர் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமான செயல். இந்த செயலின் மூலம் அவர்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் 2012 கல்வி உரிமை விதிகளை மீறுகிறார்கள். இதனால் அவர்கள் எந்த தயவையும் கோர முடியாது. 

பள்ளியில் சேர்க்கக் கூடாது

ஆர்டிஇ (Right of Children to Free and Compulsory Education Act) 2012 விதிகளின்படி, எந்த ஒரு பாலர் பள்ளியும் குறிப்பிட்ட கல்வியாண்டில் ஜூன் 1ஆம் தேதி அன்று 3 வயது நிறைவு அடையாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கக் கூடாது’’ என்று கருத்துத் தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த பெற்றோர் தரப்பினர், ’’ஜூன் 1, 2023-ல் குழந்தைகளின் வயது 6 பூர்த்தி அடையவில்லை என்றாலும் பாலர் பள்ளியில் 3 வயது நிறைவடைந்த பிறகு சேர்த்திருந்தால் போதும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர். இது மறுக்கப்படும் பட்சத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் 21 ஏ பிரிவின்படி, தங்களின் உரிமை பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர். 

எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ’’6 வயது நிறைவடைந்த பிறகே இந்த உரிமை வழங்கப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு  2(c), 3, 4, 14 மற்றும் 15 ஆகியவற்றின்படி, முறையான பள்ளியில் 6 வயது நிறைந்த குழந்தைக்கு, கல்வி மறுக்கப்படக் கூடாது’’ என்று தெரிவித்தனர்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola