தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்காக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விரும்புவோர் www.tnmedicalselection.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மருத்துவம் படிக்க விரும்பி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் கிடைக்கவில்லையென்றால் வேறு வாய்ப்புகளே இல்லையென்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவற்றைத் தாண்டி ஏராளமான துணை மருத்துவப் படிப்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுக்கான வேலைவாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.
இந்த நிலையில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. மாணவர்கள் https://reg24.tnmedicalonline.co.in/pmc//MyCourse.aspx என்ற இணைப்பை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
என்னென்ன படிப்புகள்?
பி.பார்ம், பி.பி.டி., நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியோகிராபி, கார்டியா பல்மனரி டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி,க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன.
அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம். வ்மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை https://tnmedicalselection.net/news/23052024013949.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்த்து, விரிவாக அறியலாம்.
கலந்தாய்வு எப்போது?
எனினும் தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிப்பது எப்படி?
* மாணவர்கள் https://reg24.tnmedicalonline.co.in/pmc//MyCourse.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் புதிதாக முன்பதிவு செய்து, லாகின் செய்ய் வேண்டும்.
* கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும்.
* இணையதள விண்ணப்ப படிவத்தை ஏற்காத நிகழ்வில் மறுபரிசீலனைக்கு எந்த ஒரு கடிதமோ / கோரிக்கையோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
* அதேபோல முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்பப் படிவமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 044-29862045
2. 044-29862046
3. 044-28363822
4. 044-28364822
5. 044-28365822
6. 044-28366822
7. 044-28367822
8. 044-28361674
கூடுதல் தகவல்களுக்கு: https://tnmedicalselection.net/ மற்றும் www.tnmedicalselection.org