MBA, MCA, M.E, M.Tech, M.plan, M.Arch போன்ற உயர்கல்வியில் சேர நினைக்கும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் டான்செட் ( TANCET) தேர்வில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இத்தேர்விற்கு வருகின்ற மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். 


முதுநிலைப்பட்டப்படிப்பு பயில நினைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த மாணவர்களை மட்டும் படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற மனநிலையும் ஒரு புறம் அதிகரித்துள்ளது. இதன்படி,  அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற 2022-2023 ஆம் கல்வியாண்டின் படி, MBA, MCA, M.E, M.Tech, M.plan, M.Arch முதுநிலைப்பட்டப்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் கண்டிப்பாக டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் எனவும்  ஆன்லைனில் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





TANCET நுழைவுத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:


முதலில் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


முகப்பு பக்கத்தில் உள்ள TANCET 2022 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


பின்னர் உங்களுடை அனைத்து விபரங்களையும் நீங்களே உள்ளீடு செய்துக்கொள்ளுங்கள்.


விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் நுழைவுத்தேர்விற்கான விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.


இதனையடுத்து submit என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இப்போது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.


குறிப்பாக, தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும்  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


நுழைவுத்தேர்வு தேதி மற்றும் இதர விபரங்கள்:


எம்சிஏ படிப்பிற்கு வருகின்ற மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.


எம்.பி. ஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.





எம்இ, எம்டெக், எம்ஆர்க் , எம் பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கு மே 15ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


எனவே மேற்படிப்பில் சேர நினைக்கும் மாணவர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  மேலும் இந்த நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க என்னென்ன தேவை? என்பது குறித்த  கூடுதல் விபரங்களை https://tancet.annauniv.edu/tancet/ மற்றும்  https://tancet.annauniv.edu/tancet/Procedure%20%20for%20Online%20Registration.pdf  என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.