தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள செவிலியர் பட்டப்ப படிப்புக்கு 2025- 26ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண்கள் மட்டுமே சேரக்கூடிய டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கும் பார்ம்.டி படிப்புகளுக்கும் சேர ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழை முதல் மொழியாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே நர்சிங் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பப் படிவக் கட்டணம்: ரூ.300
விண்ணப்பிப்பது எப்படி?
- ஆர்வமும் தகுதியும் கொண்ட தேர்வர்கள் https://reg25.tnmedicalonline.co.in/pmc25/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
- இதில் முதல் படியாக அறிவிக்கையை வாசித்து, முன்பதிவு செய்ய வேண்டும்.
- லாகின் செய்து கொள்ள வேண்டும்.
- தேவையான தகவல்களை உள்ளிட்டு, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.
19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர மருத்துவக் கல்வி இயக்ககம் முழு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதை https://tnmedicalselection.net/news/16062025233608.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
துணை மருத்துவப் படிப்பு; கலந்தாய்வு எப்போது?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், அந்த படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சந்தேகங்களை நிவர்த்தி செய்ய
தொலைபேசி எண்கள்: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046
இணையதள முகவரி: www.tnmedicalselection.orgwww.tnhealth.tn.gov.in