பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாஅர்.


நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அன்றைய தினத்தில் இருந்து திட்டமிட்டபடி பள்ளிகள் செயல்படும் என்றும் கூறினார். பள்ளிக்கு தொடர்ந்து வருவதை பழக்கப்படுத்தவே பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் தைரியம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.


மேலும், மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என்றும், அதற்கு பதிலாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் டிசம்பரில் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று கூறிய அமைச்சர், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் கூறினார்.




முன்னதாக சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், “1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும்போது ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிய முடியாது என்பதால், அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். முகக்கவசம் அணிவதில் பிள்ளைகளுக்கு உள்ள கவனத்தை கண்காணிப்போம். பிஞ்சுக்குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். முதலில் பிள்ளைகள் பள்ளிக்கு வரட்டும், கட்டுப்பாடுகளை மேம்படுத்துவோம். தமிழ்நாட்டில் 98 சதவீதம் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” என்று அமைச்சர் கூறினார்.


மாணவர்களுக்கு எப்போது தேர்வு?


மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகளில் சிறுசிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் வருகை அதிகரித்தவுடன் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண