ஜேஎன்வி என்று அழைக்கப்படும் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


இந்தியா முழுவதும் 1986ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பழைய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ( Jawahar Navodaya Vidyalayas - JNVs) ஆரம்பிக்கப்பட்டன. நாடு முழுவதும் 27 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இரு பாலரும் படிக்கும் உறைவிடப் பள்ளிகள்


மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) சார்பில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண், பெண் என இரு பாலரும் சேர்ந்து படிக்கும் உறைவிடப் பள்ளிகள் இவை. மத்திய அரசே இந்தப் பள்ளிகளுக்கு முழுமையாக நிதி அளிக்கிறது.


இந்த நிலையில், ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வு (JNVST) நடத்தப்படுகிறது.


செப்டம்பர் 16 கடைசித் தேதி


2024- 25ஆம் ஆண்டுக்கு முன்னதாக 5ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள், 6ஆம் வகுப்பில் நவோதயா வித்யாலயா சமிதியில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு செப்டம்பர் 16 கடைசித் தேதி ஆகும். navodaya.gov.in என்ற இணையதள இணைப்பை க்ளிக் செய்து, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


எனினும் அனுமதிச் சீட்டு, தேர்வு தேதி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.  


விண்ணப்பிப்பது எப்படி?



  • பெற்றோர்கள் https://navodaya.gov.in/nvs/en/Home1 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • அதில், 6ஆம் வகுப்பு விண்ணப்பப் படிவத்தை க்ளிக் செய்யவும்.

  • முன்பதிவு இணைப்பை https://cbseitms.rcil.gov.in/nvs/Index/Registration என்ற இணைப்பை க்ளிக் செய்து, அனைத்துத் தகவல்களையும் உள்ளீடு செய்யவும்.

  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தப் பூர்த்தி செய்து, லாகின் செய்யவும்.

  • விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பித்து, சேமித்துக் கொள்ளவும்.  


கூடுதல் தகவல்களுக்கு: 011-40759000 / 011-69227700 ,


இ-மெயில் முகவரி: nvsre.nt@nta.ac.in