கல்வி அமைச்சகம், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை 2025 ஐ இன்று, செப்டம்பர் 4 அன்று nirfindia.org இல் வெளியிட்டுள்ளது.
NIRF தரவரிசைப்பட்டியல்:
இந்த தரவரிசை பட்டியலானது இந்தியா முழுவதும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களை பட்டியலிடும் தரவரிசையின் பத்தாவது பதிப்பாகும். NIRF என்பது நாட்டில் உயர்கல்வியை மதிப்பிடுவதற்கும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தகவலறிந்த தேர்வுகளைச் செய்வதற்கும் உதவும் மிகவும் நம்பகமான கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
இந்த ஆண்டு, தரவரிசை பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட 16 க்கும் மேற்பட்ட பிரிவுகளை உள்ளடக்கியது. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது கல்வியில் நிலைத்தன்மையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவக்கப்பட்டுள்ளது. தரவரிசை கற்பித்தல் தரம், ஆராய்ச்சி வெளியீடு பட்டமளிப்பு முடிவுகள், உள்ளடக்கம் மற்றும் ஒட்டுமொத்த நற்பெயரை அடிப்படையாகக் கொண்டது.
சென்னை ஐஐடி முதலிடம்:
இந்தப்பட்டியலில் சென்னை ஐஐடி 2016 ஆம் ஆண்டில் இருந்து, அதாவது தரவரிசை பட்டியில் முதன்முதலில் வெளியிடப்பட்ட ஆண்டில் இருந்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது,
டாப் பத்து இடங்கள்
| ரேங்க் | நிறுவனம் | இடம் |
| 1 | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ் | சென்னை, தமிழ்நாடு |
| 2 | இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) பெங்களூரு | பெங்களூரு, கர்நாடகா |
| 3 | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மும்பை | மும்பை, மகாராஷ்டிரா |
| 4 | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) டெல்லி | டெல்லி |
| 5 | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) கான்பூர் | கான்பூர், உத்தரபிரதேசம் |
| 6 | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) கரக்பூர் | கரக்பூர், மேற்கு வங்காளம் |
| 7 | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) ரூர்க்கி | ரூர்க்கி, உத்தரகண்ட் |
| 8 | அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) டெல்லி | டெல்லி |
| 9 | ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் | டெல்லி |
| 10 | பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்வாரணாசி | உத்தரப் பிரதேசம் |