நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில், மாநிலப் பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.


பிற தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு எந்த இடம்?


இந்தியாவிலேயே மாநிலப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பிடித்து, அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அசத்தி உள்ளது. மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.


கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 12ஆம் இடத்தையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 17ஆவது இடத்திலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 25ஆவது இடத்திலும் உள்ளன.


தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 26ஆவது இடத்தையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 31ஆவது இடத்திலும் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 37ஆவது இடத்திலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் 49ஆவது இடத்திலும் உள்ளன.


 


ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு வெளியானது. 


தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.


இந்த பட்டியலில், ஒட்டுமொத்த அளவில் 6ஆவது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்தம் 89.79 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. 


கூடுதல் தகவல்களுக்கு:  https://www.nirfindia.org/


முழு தரவரிசைப் பட்டியலையும் காண: