என்ஐஓஎஸ் எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் (NIOS) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் (NIOS) 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு (Secondary) மற்றும் 12 ஆம் வகுப்பு (Senior Secondary) பொதுத் தேர்வுகளுக்கான முழுமையான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தேர்வுகள் அக்டோபர் 14, 2025 அன்று தொடங்கி, நடைபெறும். இந்தியா முழுவதும் உள்ள நியமிக்கப்பட்ட மையங்களிலும், வெளிநாடுகளில் உள்ள மையங்களிலும் தேர்வு நடக்க உள்ளது
தேர்வு அட்டவணை
10, 12 ஆகிய இரு வகுப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 18, 2025 வரை நடைபெறும். தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று NIOS தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 27, 2025 வரை நடத்தப்படும் என்று வாரியம் அறிவித்திருந்தது. தேர்வுகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தேர்வு கட்டணத்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.
10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது?
மாணவர்கள் முழுமையான கால அட்டவணையைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்:
-
NIOS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nios.ac.in ஐப் பார்வையிடவும்.
-
முகப்புப் பக்கத்தில், "Examination/Date Sheet" பிரிவைக் கிளிக் செய்யவும்.
-
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு தேதித் தாள் 2025க்கான இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
-
தேதித் தாள் PDF வடிவத்தில் தோன்றும்.
-
எதிர்கால குறிப்புக்காக கோப்பைப் பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
அட்மிட் கார்டு எப்போது?
அக்டோபர்- நவம்பர் பொதுத் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகள் அல்லது ஹால் டிக்கெட்டுகள் தேர்வுகளுக்கு சில நாட்கள் முன்பு வெளியிடப்படும். பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் sdmis.nios.ac.in-ல் உள்ள மாணவர் போர்ட்டல் மூலம் உள்நுழைந்து தங்கள் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு முடிவுகள் எப்போது?
NIOS வாரியத்தின் சார்பில் பொதுத் தேர்வுகளின் முடிவுகள் தேர்வுகள் முடிந்த ஏழு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும். சரியான முடிவு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் நேரடியாக NIOS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.