NEET Expected Cut-Off Marks 2025: நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 14) வெளியாகும் நிலையில், யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு தேவை என்று பார்க்கலாம்.
எவ்வளவு பர்சண்டைல் தேவை?
பொதுவாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேர பர்சண்டைல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பொதுப் பிரிவினர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர குறைந்தபட்சம் 50 பர்சண்டைல் பெற்றிருக்க வேண்டும்.
ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி தேர்வர்கள் 40 பர்சண்டைல் எடுத்தால் போதுமானது. அகில் இந்திய தரவரிசைப் பட்டியலில் பெறப்படும் அதிகபட்ச மதிப்பெண்களையும் ஒட்டுமொத்தமாகத் தேர்வு எழுதிய தேர்வர்களையும் அடிப்படையாக வைத்து பர்சண்டைல் கணக்கீடு செய்யப்படுகிறது.
என்ன கட் –ஆஃப் மதிப்பெண்கள் தேவை?
இந்த நிலையில் பொதுப் பிரிவினர், பிற பிரிவினர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர என்ன கட் –ஆஃப் மதிப்பெண்கள் தேவைப்படும் என்று காணலாம்.
பொதுப் பிரிவினர் - 720-164
பொதுப் பிரிவினர் (மாற்றுத் திறனாளிகள்) - 163-146
எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி – 163-129
எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி (மாற்றுத் திறனாளிகள்) - 145-129
எஸ்டி (மாற்றுத் திறனாளிகள்) - 141-129
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-ஐ க்ளிக் செய்யவும்.
- அதில் NEET 2025 scorecard download என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- நீட் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- அதில் மேலும் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
- உடனே, தேர்வு முடிவு அடங்கிய பிடிஎஃப் கோப்பு திறக்கும்.
- உங்கள் பெயர் மற்றும் மதிப்பெண்களைச் சரிபார்க்கவும்.
- எதிர்கால குறிப்புக்காக கோப்பைச் சேமிக்கவும்.
நாடு முழுவதும் நீட் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 557 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாட்டில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://neet.nta.nic.in/