NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

NEET UG Exam 2025: 2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 7ஆம் தேதி வரை தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம். தேர்வுக் கட்டணம் எவ்வளவு, தேர்வு மையம் எங்கே என்பன உள்ளிட்ட பிற விவரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று இந்தத் தேர்வு அழைக்கப்படுகிறது. 

தேர்வு எப்போது?

2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 7ஆம் தேதி வரை தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கிடையே நீட் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும், இந்த முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

  • விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது, மாணவர் சேர்க்கையின்போது 17 நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
  • நீட் இளங்கலைத் தேர்வை எழுத, விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட தேர்வர், 12ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முன், தேர்வர்கள் என்டிஏ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf என்ற இணைப்பில் அறிவிக்கையை முழுமையாகப் பெற்ளாம்.

  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பப் படிவம் ஏற்கப்படாது.
  • ஒரு தேர்வர் ஒரு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
  • இ மெயில் முகவரி, மொபைல் ஆகியவை உங்களுடையதாக அல்லது உங்கள் பெற்றோர்/ பாதுகாவலரின் விவரமாக இருக்க வேண்டும். அந்த எண், இ மெயில் முகவரிக்குத்தான் விவரங்கள் அனுப்பப்படும்.
  • அனைத்து கேள்விகளுக்கும் உரிய விடையை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
  • வருங்காலத் தேவைக்காக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • 2 முறை விண்ணப்பக் கட்டணம் தவறுதலாக செலுத்தப்பட்டு விட்டால், என்டிஏ சம்பந்தப்பட்ட தேர்வருக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்திவிடும்.

தேர்வுக் கட்டணம்

பொதுத் தேர்வர்களுக்கு – ரூ.1,700

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர்- ரூ.1,600

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் – ரூ.1000

வெளிநாட்டுத் தேர்வர்கள் – ரூ.9,500

தேர்வு மையம்

ஏப்ரல் 26ஆம் தேதி அன்று தேர்வு மையங்கள் குறித்த விவரம் வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

முழு விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf

Continues below advertisement
Sponsored Links by Taboola