இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான் உள்ளதால் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறுகிறது. ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்க உள்ளன. தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 7ஆம் தேதி வரை தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
இதுகுறித்துத் தேசியத் தேர்வுகள் முகமை கூறும்போது, ’’இதோ முக்கிய அறிவிப்பு. மார்ச் 7ஆம் தேதி இரவு 11.50 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்க்க உடனடியாக விண்ணப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தவும். கூடுதல் தகவல்களைப் பெற என்ற இணைய முகவரியைக் காணுங்கள்’’ என்று தெரிவித்துள்ளது. neet.nta.nic.in
கேள்வித் தாளில் மாற்றம்
இதற்கிடையே நீட் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும், இந்த முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்கும் முன், தேர்வர்கள் என்டிஏ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பப் படிவம் ஏற்கப்படாது.
ஒரு தேர்வர் ஒரு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
இ மெயில் முகவரி, மொபைல் ஆகியவை உங்களுடையதாக அல்லது உங்கள் பெற்றோர்/ பாதுகாவலரின் விவரமாக இருக்க வேண்டும். அந்த எண், இ மெயில் முகவரிக்குத்தான் விவரங்கள் அனுப்பப்படும்.
அனைத்து கேள்விகளுக்கும் உரிய விடையை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
வருங்காலத் தேவைக்காக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2 முறை விண்ணப்பக் கட்டணம் தவறுதலாக செலுத்தப்பட்டு விட்டால், என்டிஏ சம்பந்தப்பட்ட தேர்வருக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்திவிடும்.
ஏற்கெனவே முன்பதிவு செய்த தேர்வர்கள், https://examinationservices.nic.in/neet2025/root/CandidateLogin.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOr/hcv4rs34T5gNmvCx/R+aஎன்ற இணைப்பின் மூலம் வின்ணப்பிக்க வேண்டும்.
முதல் முறையாக விண்ணப்பிக்கும் நபர்கள், https://examinationservices.nic.in/NEET2025/Registration/Instruction.aspxஎன்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்த பிறகே விண்ணப்பிக்க முடியும்.
ஏதேனும் சந்தேகம் எனில்,
இ மெயில் முகவரி: neetug2025@nta.ac.in
தொலைபேசி எண்கள்: 011-40759000/ 011-69227700