நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் அனைத்து பிரிவுகளிலும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளன. 

நீட் தேர்வு முடிவுகளில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார்.  டெல்லியைச் சேர்ந்த மாணவர் வத்ஸா ஆஷிஸ் பத்ரா 2ஆவது இடத்தைப் பிடித்தார். இவரும் அதே மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஹ்ரிஷிகேஷ் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவரும்  720-க்கு 715 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார்.  

நீட் தேர்வில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 160 மாணவர்களும், 5 லட்சத்து 63 ஆயிரத்து 902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர்  720-க்கு 705 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார்.  அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 

 

என்ன பிரிவு? இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் (2022ஆம் ஆண்டு) கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் (2021ஆம் ஆண்டு)
பொதுப் பிரிவு  715-117  720-138
ஓபிசி பிரிவினர்  137-108 116- 93 
எஸ்சி பிரிவினர் 137-108 116-93

கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்

எஸ்டி பிரிவினர்- 137-108
எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி (மாற்றுத்திறனாளிகள்)- 121-108.

இந்திய மருத்துவ கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள 270 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 41 ஆயிரம் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 5,300 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன. 


மதிப்பெண் கணக்கீடு

நீட் தேர்வு எழுதியவர்களின் ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாட விடை ஒவ்வொன்றுக்கும் 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 12ஆம் தேதி தொடங்க உள்ளது.