நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின. சரியான நேரத்தில் வெளியானதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார்.


https://nbe.edu.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து தெரிவித்து கொள்ளலாம்.


இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு,மார்ச் மாதம் 05 ஆம் தேதி நடைபெற்றது.


முதுநிலை நீட் தேர்வு


இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.


இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.  தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு,மார்ச் மாதம் 05 ஆம் தேதி நடைபெற்றது.


1.60 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 600 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. எம்பிபிஎஸ் முடித்த 1.60 லட்சத்துக்கு அதிகமான மருத்துவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 271 நகரங்களில் சுமார் 600 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது.


1.60 லட்ச மாணவர்கள் எழுதும் தேர்வு, பகல் 12.30 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, சேலம், திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு மையங்களில் முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது.


இந்நிலையில், இன்று நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து, தனது ட்விட்டர் பதிவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


நீட்-பிஜி 2023 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.






நீட்-பிஜி தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி, சரியான நேரத்தில் முடிவுகளை அறிவித்ததன் மூலம் என்.பி.இ.எம்.எஸ் மீண்டும் ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளது. அவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.