2025ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக, மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் முதுகலைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? பார்க்கலாம்.
நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் பிஜி தேர்வு கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுகலை படிப்புகளில் சேர முடியும்.
நீட் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?
பொதுப் பிரிவு / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்- 50 பர்சண்டைல்
எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி- 40 பர்சண்டைல்
பொது மாற்றுத் திறனாளிகள் – 45 பர்சண்டைல் ஆகியவற்றைப் பெற்றிருந்தல் மட்டுமே கல்லூரிகளில் சேர முடியும்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி நடந்த நீட் முதுகலைத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியானதும் தேர்வர்கள் மதிப்பெண் அட்டைகளைப் பெறலாம்.
எப்படி?
- தேர்வர்கள் natboard.edu.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில் தோன்றும் "NEET PG 2025 Result" என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- பதிவு எண், பிறந்த தேதி மற்றும் லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
- விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்கவும்.
- மதிப்பெண் அட்டை திரையில் தோன்றும்.
தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உதவி எண்: 7996165333 (ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசிதழ் விடுமுறை நாட்கள் தவிர, காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை )
கூடுதல் தகவல்களுக்கு: natboard.edu.in