முதுநிலைப் பல் மருத்துவப் படிப்புகளில் (எம்டிஎஸ்) சேர நடத்தப்படும் நீட் எம்டிஎஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்வர்கள் இதை https://nbe.edu.in மற்றும் https://natboard.edu.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.
அல்லது https://natboard.edu.in/viewUpload?xyz=d0NXL00va2h6VGhENW44dTBpOXFuZz09 என்ற இணைப்பை க்ளிக் செய்து எம்டிஎஸ் தேர்வு முடிவுகளை அறியலாம்.
இந்தியா முழுவதும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் முதுநிலை நீட் படிப்புக்கு முதுநிலை நீட் தேர்வும் நடத்தப்படும்.
எம்டிஎஸ் படிப்புகளில் சேர தனியாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) இந்தத் தேர்வை நடத்துகிறது. நீட் எம்டிஎஸ் தேர்வு மார்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இந்தத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
காண்பது எப்படி?
தேர்வர்கள் இதை https://nbe.edu.in மற்றும் https://natboard.edu.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.
அல்லது https://natboard.edu.in/viewUpload?xyz=d0NXL00va2h6VGhENW44dTBpOXFuZz09 என்ற இணைப்பை க்ளிக் செய்து எம்டிஎஸ் தேர்வு முடிவுகளை அறியலாம்.
தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக 50 பர்சண்டைல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுப் பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கும் பொருந்தும்.
எஸ்சி/ எஸ்டி / ஓபிசி பிரிவினருக்கு 40 பர்சண்டைல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 45 பர்சண்டைல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட் – ஆஃப் எவ்வளவு?
பொதுப் பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கும் 263 மதிப்பெண்கள் கட் – ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எஸ்சி/ எஸ்டி / ஓபிசி பிரிவினருக்கு 230 மதிப்பெண்கள் கட் – ஆஃப்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு கட் ஆஃப் 246 ஆக உள்ளது.
மதிப்பெண் பட்டியல் எப்போது?
தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 12 அல்லது அதற்குப் பிறகு டவுன்லோடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்புகொள்ள
https://exam.natboard.edu.in/communication.php?page=main
தொலைபேசி எண்: 011-45593000
கூடுதல் விவரங்களுக்கு: https://natboard.edu.in/