நடப்பாண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்தாண்டை விட நடப்பு ஆண்டில் கட்டணம் 100 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்தாண்டு 800 ரூபாயாக இருந்த மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம் நடப்பாண்டில் 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. 1500 ரூபாயாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கட்டணம் 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ.1400இல் இருந்து 1500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கட்டணத்துடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 20 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர ஒதுக்கீடு 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு கடந்த ஏப்ரல் 2 முதல் வருகிற மே 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த  நிலையில்தான் தேர்வு முகமை, நீட் தேர்வு நேர நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


மேலும், இந்தத்தேர்வில் இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும். மேலும், தேர்வுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்தத்தேர்வில் இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண