தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவில் காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 தேசிய அளவிலான கல்விக்கான பொதுவான அமைப்பினை வடிவமைத்தல், ஆதரித்தல் போன்ற நிலைப்பாடுகளுடன் இந்திய அரசின் கல்வி அமைச்சம் NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவினை ஆரம்பித்தது. தற்பொழுது இங்கு காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other ஆகிய காலியாக 38 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவில் தற்பொழுது அறிவித்துள்ள Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other போன்ற எந்தப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் நினைக்கிறீர்களோ? அதனை https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/Advertisement_for_the_project_posts_of_DIKSHA.docx.pdf மற்றும் https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/Advertisement%20for%20Proiect%20Staff%20for%20Strengthening%20Adult%20Education(CNCL).pdf ஆகிய இவ்விரு பக்கங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எந்தப்பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் மேற்கண்ட பக்கத்தில்  உள்ள கூகுள் படிவம் (Google link) இணைப்பினைப்பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறிப்பாக Sr. Consultant, Consultant பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நினைப்பவர்கள் Master degree in adult education, social science and social work ஆகிய பிரிவுகளில் 55 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜூலை 28க்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அடிப்படையில் தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் Sr. Consultant பதவிக்கு ரூ. 60 ஆயிரம் சம்பளமும், Consultant ரூ.45 ஆயிரம் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இத்தோடு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் மூலம் அறிவிக்கப்பட்ட மற்ற பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜூலை 30 ஆம் தேதிக்குள்  வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் கூகுள் படிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 30-ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிக்கு ஏற்றாற்போல் ரூ. 23 ஆயிரத்திலிருந்து ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.