2026ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் கால்குலேட்டர்களுக்கு அனுமதி உண்டா என்று தேர்வை நடத்தும் என்டிஏ விளக்கம் அளித்துள்ளது.
கால்குலேட்டர்களைப் பயன்படுத்துவதற்கு தடை
என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை (NTA), JEE முதன்மைத் தேர்வில் கால்குலேட்டர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டு, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE முதன்மை) 2026-ல் கால்குலேட்டர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
என்டிஏ தனது அதிகாரப்பூர்வ தகவல் அறிவிப்பில், கணினி அடிப்படையிலான தேர்வின் (CBT) போது திரையில் ஒரு நிலையான கால்குலேட்டர் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்த பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
எந்த வடிவத்திலும் பயன்படுத்த அனுமதி இல்லை
இது தேர்வர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பின்னர் விளக்கம் அளித்த என்டிஏ, "இந்த அம்சம் பொதுவான தேர்வு நடத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாகும், இது ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு இது பொருந்தாது, ஏனெனில் இந்த தேர்வில் எந்த வடிவத்திலும் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளது.
NTA மேலும், ’’இது ஒரு பிழை என்றும் தேர்வின் தகவல் அறிவிப்பில் ஏற்பட்ட அச்சுப் பிழை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். விண்ணப்பதாரர்கள் என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
தேர்வு எப்போது?
ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டு அமர்வுகளில் நடைபெற உள்ளது. முதல் அமர்வு ஜனவரி 2026-லும் மற்றும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 2026-லும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு நகரங்களின் எண்ணிக்கை, 284-ல் இருந்து 323 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://nta.ac.in/