சாய் வித் சித்ராவில் சித்ரா லட்சுமணன் உடன் பேசிய இயக்குநர் பாரதி கண்ணன் நடிகர் கார்த்திக் குறித்து பல சுவாரஸ்ய்மான தகவல்களை பகிர்ந்துகொண்டார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த கார்த்திக் தனது சொந்த நடத்தையால் சரிவை சந்தித்தார் என இந்த பேட்டியில் பாரதி கண்ணன் கூறியுள்ளார். 

Continues below advertisement

நடிகர் கார்த்திக்கின் சினிமா சாம்ராஜ்ஜியம் சரிந்தது ஏன் 

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நவரச நாயகன் என செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனாவார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்தி 80 , 90 களில் மக்களால் குறிப்பாக பெண்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவராக மாறினார். மணிரத்னம் ,   பாரதிராஜா, விசு, ஆர்.சுந்தர்ராஜன், அமீர்ஜான், ஆர்.வி.உதயகுமார், பிரியதர்ஷன், ஃபாசில், விக்ரமன், அகத்தியன், சுந்தர் சி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களின் படங்களில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகராக உச்சத்தில் இருந்த கார்த்திக்கின் தனிப்பட்ட சில பழக்கவழக்கங்களால் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டார். இதுகுறித்து இயக்குநர் பாரதி கண்ணன் பேசுகையில் இப்படி கூறினார்

கார்த்திக்கிட்ட பணம் கொடுத்தா திருப்பி வராது 

" கார்த்திக்கிடம் ஒரு கதை சொவதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டார் , பணம் வாங்கிவிட்டு கால்ஷீட் தரமாட்டார் என அவர் மீது அப்போது நிறைய குற்றச்சாட்டு இருந்தன. அப்போதான் நாங்கள் கார்த்திக்கிடம் சிக்கினோம்  கதை சொல்வதற்காக  5 லட்சம் பணத்துடன் கார்த்தி வீட்டிற்கு சென்றேன். கார்த்தி உற்சாகமாக வரவேற்றார். நான் பணத்தை கையில் தொடுவதில்லை அப்பா ஃபோட்டோ முன்னாள் வைத்துவிடுங்கள் என்று சொன்னார்.  கழுத்தில் மாட்டியிருந்த தனது தந்தையின் டாலரை பிடித்துவிட்டு இந்த படம் பெருசா வரும்னு எனக்கு தோனுது அப்பாவோட வைப்ரேஷன் இருக்கு என்று சொன்னார். பின் அடுத்த வாரம் நான் ஊட்டிக்கு செல்கிறேன் அங்கு வந்து கதை சொல்லுங்கள் என்றார். இடையில் ஒரு நாள் அழைத்து 5 லட்சம் பணம் கேட்டார். தயாரிப்பாளரிடம்  அந்த பணத்தை வாங்கிக்கொண்டு நான் ஊட்டிக்கு சென்றேன். கார்த்தி மது அருந்திக்கொண்டு அருந்திக்கொண்டு இருந்தார் . நான் கொண்டு போன 5 லட்சத்தை வாங்கி வைத்துவிட்டு கதை கேட்டார். இந்த கதையில் நிறைய ரத்தம்  இருக்கிறது அதனால் கதையை மாற்றலாம் என சொன்னார். அதற்குள் தயாரிப்பாளர் கார்த்தியைப் பற்றி விசாரித்துவிட்டு கார்த்தியிடம் கொடுத்த பணத்தை வாங்கிவிட்டு வரசொல்லிட்டார். அப்போது அவர் லவ்லி என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். தூங்கி எழுந்து மாலை 4 மணிக்குதான் அவர் படப்பிடிப்பிற்கே வருவார். அப்போது ஒரு காட்சி தான் எடுக்கவே முடியும். நான் கார்த்தியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன். கார்த்திக்கு காசு கொடுத்தா வராதுனு இண்டஸ்ட்ரிக்கே தெரியுமே உங்களுக்கு தெரியாதா என்று சர்வ சாதாரணமாக கேட்டார். கார்த்திக் ஒரு மிகப்பெரிய நடிகர் அவருடைய மார்கெட்டை வேற யாரும் கெடுக்கல. அவரேதான் கெடுத்துக்கொண்டார். "

Continues below advertisement