2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் யார் யாருக்கு?
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது அளிக்கப்பட உள்ளது.
இவர்கள் இருவருக்கும் டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.
புதுச்சேரியில் விருது அறிவிப்பு
அதேபோல புதுச்சேரியில் ரெக்ஸ் என்னும் ராதாகிருஷ்ணன் என்னும் ஆசிரியருக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
45 பேர் தேர்வு
நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://nationalawardstoteachers.education.gov.in/