ரோட்டரி, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்‌ துறையுடன்‌ இணைந்து, அரசுப்‌ பள்ளிகளில்‌ வாஷ் வசதிகளை உருவாக்குதல்‌, பராமரித்தல்‌ மற்றும்‌ பள்ளியின்‌ அன்றாட பராமரிப்பு பணிகளை (housekeeping) ஏற்று நடத்துதல்‌ ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்திட்டுள்ளது.

அரசுப்‌ பள்ளிகளில்‌ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும்‌ கற்றல்‌ தரத்தை உயர்த்தும்‌ நோக்கிலும் ஒரு பெருமுயற்சியை தமிழ்நாட்டில்‌ உள்ள ரோட்டரி சங்கங்கள்‌, CARE4School திட்டத்தின்‌ கீழ்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்‌ திட்டத்துடன்‌ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தை துணை முதல்வர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ முன்னிலையில்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, அதிகாரப்பூர்வமாகத்‌ தொடங்கி வைத்தார்‌.

தமிழ்நாடு ரோட்டரி அமைப்பின்‌ சர்வதேசத்‌ தலைவர்‌ பிரான்செஸ்கோ அரேஸ்ஸோ மற்றும்‌ ரோட்டரி சர்வதேச இயக்குநர்‌ முருகானந்தம்‌ சென்னை வர்த்தக மையத்தில்‌ நடைபெற்ற, ரோட்டரி இந்தியவின்‌ தலைமை மாநாட்டில்‌ கலந்து கொண்டனர்‌.

திட்டத்தின் நோக்கம் என்ன?

 இத்திட்டம்‌ நீர்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ WASH வசதிகளை உருவாக்குவதையும்‌ பராமரிப்பதையும்‌ நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. இத்திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌ தமிழ்நாடு முழுவதும்‌ 1,000 அரசுப்‌ பள்ளிகளை மேம்படுத்துவது, ஒவ்வொரு மாணவ மாணவியும்‌, குறிப்பாகப்‌ பெண்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளி மாணவர்கள்‌, பாதுகாப்பான, சுத்தமான மற்றும்‌ நன்கு பராமரிக்கப்படும்‌ கழல்களிலிருந்து பபனடைவதை உறுதி செய்வதாகும்‌.

நிகழ்வில்‌ பேசிய துணை முதல்வர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, “ரோட்டரி ஒரு சேவை அமைப்பு மட்டும்‌ அல்ல, மாறாக நம்பிக்கையின்‌ உயிர்நாடி என்றும்‌, மாநிலத்தின்‌ முன்னுரிமைப்‌ பிரிவுகளாகக்‌ கருதப்படும்‌ கல்வி மற்றும்‌ சுகாதாரத்‌ துறைகளில்‌ ரோட்டரி எப்போதும்‌ முக்கிய பங்கு வகித்து வருகிறது.” என்று அவர்‌ குறிப்பிட்டார்‌.

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்‌ வாயிலாகத்‌ தமிழ்நாடு அரசுடன்‌ இணைந்து செயல்படுவதில்‌ ரோட்டரி ஒரு சிறப்பான முன்னெடுப்பை எடுத்துள்ளதாகவும்‌, இந்தக்‌ கூட்டாண்மையின்‌ வெற்றிக்குத்‌ தனது வாழ்த்துக்களைத்‌ தெரிவித்துக்‌ கொண்டதாகவும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.

இத்திட்டம்‌, புதிய வசதிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல்‌, நமது மாணவர்களுக்குச்‌ சுத்தமான மற்றும்‌ சுகாதாரமான சூழலை உறுதி செய்வதற்காகத்‌ தொடர்ச்சியாகப்‌ பராமரிப்பது பணிகளையும்‌ மேற்கொள்வதே இத்திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌ என்று பள்ளிக்‌ கல்வி அமைச்சர்‌ வலியுறுத்தினார்‌. 1000 அரசுப்‌ பள்ளிகளில்‌ 1000 WASH வசதிகளை அமைக்க முன்வந்துள்ள ரோட்டரி அமைப்பை அமைச்சர்‌ பாராட்டினார்‌.

பராமரிப்பு பணிகளின்‌ விவரங்களைப்‌ ஒரே தளத்தில்‌ பார்வையிட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தளமான ரோட்டரி-நம்ம School டேஷ்போர்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த டஷ்போர்டு ரோட்டரி தலைவர்கள்‌, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ CSR பங்களிப்பாளர்களை இணைப்பதற்கான ஒரு தளமாகச்‌ செயல்படுகிறது. இந்த ஆண்டு 1,000 அரசுப்‌ பள்ளிகளில்‌ இச்செயல்பாடுகளை நம்ம ஸ்கூல்- நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்‌ கீழ்‌ ரோட்டரி செயல்படுத்த உள்ளது.

 அது என்ன நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி?

 நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி (நம்ம ஸ்கூல்‌ பவுண்டேஷன்‌) என்பது தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள ஒரு பிரிவு 8 நிறுவனமாகும்‌. இத்திட்டம்‌ சமூகப்‌ பங்களிப்பு நிதியினை கல்வித்‌ துறைக்கு வழங்குவதை ஊக்குவிப்பதையும்‌, அரசுப்‌ பள்ளிகளின்‌ வளர்ச்சிக்காகத்‌ தொழில்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனங்கள்‌, சமூகங்கள்‌, தனிநபர்கள்‌ மற்றும்‌ முன்னாள்‌ மாணவர்களின்‌ பங்களிப்புகளையும்‌ ஒன்றிணைப்பதையும்‌ நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. அனைத்து அரசுப்‌ பள்ளிகளின்‌ தேவைகளையும்‌ மதிப்பிடுவதற்கும்‌, தேவையான ஒப்புதல்களைப்‌ பெறுவதற்கும்‌, அரசு அதிகாரிகளின்‌ மேற்பார்வையுடன்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்கும்‌ NSNOP ஒரு தனித்துவமான தளமாகச்‌ செயல்படுகிறது.

 இந்த முயற்சி பற்றிய கூடுதல்‌ விவரங்களுக்கு, https://nammaschool.tnschools.gov.in/

 +91 63853 13047 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

 nammaschools@tnschools.gov.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.