நாகப்பட்டினம் மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.28) விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. எனினும் விடுமுறை அறிவிப்பு இல்லை என்று ஆட்சியர் விளக்கம் அளித்தாஎ. 


கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடு ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என்பதால், 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.28) விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. 


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று இரவுக்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவ.27) ஃபெங்கல் புயல் உருவாகும்பட்சத்தில் 30ஆம் தேதி வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் தரைக் காற்று வீசி வருகிறது. 


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு


நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ’’ நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொது மக்களுக்கான உதவி மையத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினோம். #NorthEastMonsoon பருவ மழை தொடர்பான ஒவ்வொரு அழைப்புகளையும், பொது மக்களின் கோரிக்கைகளையும் உடனடியாக அப்பகுதி அரசு அலுவலர்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டோம்.


மக்களுக்கு நிவாரண பொருட்கள் 


பருவமழை காரணமாக நாகப்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைச் சந்தித்து உரையாடி, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தோம். தொடர்ந்து அம்மக்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கினோம்’’ என்று அமைச்சர் தெரிவித்தார். 


எனினும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இதுவரை அளிக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.