கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள Health Inspector Grade-II போட்டித் தேர்விற்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் -2025 அறிவித்துள்ள Health Inspector Grade-ll பதவிக்கான 1429 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு 27.10.2025 அன்று https:/www.mrb.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. இக்காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இணையதளம் வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பங்கேற்பது எப்படி?

இந்தத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடக்க உள்ளது. குறிப்பாக, இணைய வழி வாயிலாக மண்டல அளவில் 2025 நவம்பர் கடைசி வாரத்தில் நடத்தப்பட உள்ளது. ஆகையால் இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் 21.11.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வகுப்புகள்     

இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test) வாராந்திர தேர்வுகள், இணையவழித் தேர்வுகள் (online test), முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Gr-2, GR-2 முதன்மை தேர்வு, Gr-4, TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு 04324-223555, 6383050010 மற்றும் 9499055912 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாய்ப்பினை இந்த போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த கரூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.