கிஷோர் எம் ராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த் , காளி வெங்கட் , விஜயலக்ஷ்மி அகத்தியன் மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இப்படம் நாளை நவம்பர் 21 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். மிடில் கிளாஸ் படத்தைப் பற்றி விமர்சர்கர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
மிடில் கிளாஸ் திரைப்பட விமர்சனம்
மிடில் கிளாஸ் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை பேசும் விதமாக இந்த ஆண்டு சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. ராம் இயக்கிய பறந்து போ , சித்தார்த் நடித்த 3BHK , மெட்ராஸ் மேடினி ஆகிய படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. அந்த வகையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் பிரச்சனைகளை மையமாக சிறிது மிகையான கற்பனை கலந்து உருவாகியுள்ள படம் மிடில் கிளாஸ். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி செக் கிடைத்தால், அது தொலைந்தால், என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை.
சிறிய பட்ஜெட்டில் உணர்ச்சிகரமாக பார்வையாளர்களுக்கு ஒரு அழகான மெசேஜை சொல்லியிருக்கிறது மிடில் கிளாஸ் திரைப்படம். முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.